செவ்வாய், 25 ஜூன், 2013

உண்மையை சொல்
நீ  என்னை காதலிக்கிறாயா?
இல்லை  சாகடிக்கிறாயா?

நிலவுக்குகூட காதல் 
தோல்விதான்  என்னைப்போல 
தேய் ந்து  உடைகிறது 
வான வெளியில் ............என் மனம்  எங்கும்
 உன் கால்தடங்கள் 
நீயோ  மறு க்கி றா ய் ....
சுவடுகள் மட்டும்
 உயி ர் ப் புடன் .............
உயி ர் ப் புடன் .............
ஒ வ்வொரு தும்மலின் போதும் 
நீ  என்னை நினைக்கி றா யோ !
இ ல்லையோ  நான் மட்டும் 
நினைத்துக்கொள் வேன் ...........

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

எத்தனை முறை நான் கெஞ்சி கேட்டாலும்
காணமல் போய் விடுகிறாய் ;
கனவு கலைந்தவுடன்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

'இன்ட்லி

புதன், 11 ஆகஸ்ட், 2010

எனக்குள் நீ ..........

எண்ண அலைகள் உன்னை
சுற்றி சுழல்வதால் .......என் சுயத்தை
இழந்து போகின்றேன் என்றாலும்
எனக்குள் சந்தோஷ அலைகள் .......
உன்னோடு எண்ணங்கள்
இணைவதால் ...............வியாழன், 5 நவம்பர், 2009

பெரியவனாக சின்னவன் .............


அண்டவெளியை ஏக்கமுடன்
அண்ணார்ந்து பார்த்து
நாளை பற்றிய கனவில்
அவனை அவனே மறந்து .....................

சின்னவனின் ஞாபகங்கள்
சிட்டுக்குருவி போல
சிறகடித்து மனமெங்கும்
சின்ன ஒரு வலி பிறக்கும்


பிஞ்சு கரம் பற்றி
பிள்ளை நடை பழக்கி
உள்ளம் உவகையுற
உளமும் ஏக்கமுறும்


நெற்றியை வருடி
நெஞ்சை நீவி
முக்குப் பிடித்து
இதழ்கள் பதித்து
மழலை கேட்டு
இதயம் கொடுத்து
இதயம் வாங்கி
சிரிப்பில் மயங்கி
உதைகள் வாங்கி
அழுகையில் துடித்து .......................
பிரிதல் இங்கு
கொடுமை ................
நாளை மகனை காண
மண்ணில் மிதிக்கையில்
பெரியவனாக இவன்
சின்னவன்.இழத்தல்,
ஆசைகள் எல்லாம்
மனதுள் கிளர்ந்தெழ
பயணம் ...................பயண முடிவில்
மழலை தொலையும்
பெரியவனாக சின்னவன் ......................

செவ்வாய், 3 நவம்பர், 2009

பூச்சரம்

யதார்த்தம்


நரைத்த நாட்களின் மத்தியில்
நகரல் மட்டும் நிரந்தரமாய்
உடைந்த மண் சட்டிகளும்
பானைகளும் முன்னைய உருவம்
பெற முயன்று தவமியற்றி ................
மண்ணோடு மண்ணாகல்
கனவை நனவுகளில் சுமந்து ..........ஏக்கங்களில்
நனைந்து.................
முழ்கி .........திணறி ............
மீண்டும் மீண்டும் சடலமாய் நீரில் மிதந்து ........


சூளையில் சுட்ட சட்டி
வலி தாங்கிக் கொண்டது
உரமாதலால் ..........ஆனால்.......
உரமான பின்னும்
தீ மேல் வழ்க்கை
உடல் தீ மேல் தகித்தல்உளமும் கூட,
கொதி நீரில் அவிந்து
சிவந்த உரு தீ மூட்டலால்
சிதைந்து கருமை உரு கொண்டு
நரைத்த நாட்களின் மத்தியில்
நகரல் மட்டும் நிரந்தரமாய்

வியாழன், 15 அக்டோபர், 2009

புதியவன்


கொலைகள் நிறை பயங்கரம்
என் மனதில் கொடூரம் .........
நாளுக்கு நாள் என்னை நானே
கொன்று புதியவன் ஆக
முயல்கின்றேன் ..........இயல்புகள்
இங்கு இல்லை ..............................
மாற்றி மாற்றி உணர்வுகள்
பச்சோந்தியை போல
நிறம் மாறி ,விம்மலையும் விசும்பலையும்
புதைத்து எதையும் தாங்குபவனாக
பாவனை செய்து ....................
மனதின் உணர்வில் கூட கலப்படம்
என்ன செய்ய ?
வேடதாரியை போல நடிகனை போல
ஆகி இயல்பை கொன்று
புதியவனாகதான் இந்த எத்தனிப்பு ..................................

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

நெடுவழிப்பயணி


நீண்டவழி பயணத்தில்
நெடுவழி பயணி .........
தாண்டி வந்த பாதையில்
தடைகற்கள் தடக்கிவிட்டு
வீழ்ந்து எழுந்தவள்தான்
வீறுநடைக்காரி இவள்.......................................


நெஞ்சளுத்தகாரி தான்
நெஞ்சில் உரம் உள்ளவள்
பஞ்சப் பாட்டு படாமல்
பரவசமாய் வாழ்ந்தவள்.


கண்பார்வை மங்கிணும் அவள்
நேசப் பார்வை மங்காது
நாசி நுகர மறுக்கும் ஆனால்
பாசி படராது மனத்தில்..............................

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

வீம்பு


உரமில்லா உள்ளங்கள்
கண்ணீ்ரில் முடங்கிவிட
மிச்சமான வாழ்க்கை
வாழாத எச்சமாகி......................
சொர்க வாசல் அருகிருந்தும்
விலகி நரகத்துள் சென்று
போதையில் புதைந்து
வாழ்வை சிதைத்து
காய்ந்த மரங்களாய்
வற்றிய ஓடைகளாய்
ஊற மறந்த ஊற்றுகளாய்
செயல் மறந்து ..........................
சோகத்துள் குடி போய்
மாயும் வாழ்வு

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

முரண்பாடுகவிதை எழுத முயன்று முயன்று

தோற்றுவிடுகிறேன் ..................

எதுகை மோனை கவியில்

எவ்விடமும் வராது

முரண்டு பிடித்ததால்............

முரண்பாடே கவியின் கருவாகி

போனது .........முரண்பாட்டை சொல்ல

சொற்களை தேடி தேடி முரண்படுகிறேன்

மனதின் உள்ளேஉறங்கா விழிகள் விழித்திருக்க

மறக்கமுடியாமல்................

என்னுள்ளே சூறாவளி சுழன்றடிக்க

சுருட்டப்பட்ட பாய் போல் ................

வீட்டின் ஓரத்தே ஒதுங்குகிறேன் .


சொன்ன சொற்கள் இன்னும்

மனதின் ஓரத்தே இல்லை

மனதின் அணுவெல்லாம்

நீக்கமற

நிறைந்து வலி செய்கிறது.


உண்மை உணர்வின்றி

இவர் பேசும் வார்த்தைகள்

உடன் மறையா.......................

காதுகளால் சேகரித்து ..................உள்ளம்

எனும் நெசவுத்தறியில் மீண்டும் மீண்டும்

நெய்யப்படும்............

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

பூச்சரம்

வண்ணத்துப்பூச்சி


வண்ணச்சிறகு கொண்ட
வனத்து சிங்காரி ..................
வனப்பு நிறை சிறகு விரிக்கும்
வஞ்சி நீயன்றோ?

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009


பிஞ்சு கரங்கள்


பஞ்சு நிகர் மென் கரங்கள் பாரமான
பொருளை தூக்கித்தூக்கி
சிவந்து .........கொப்பளித்து ...........................
புண்ணாகி .................உரமாக முயன்று ...........


இவர் வியர்வை சிந்துவர்
இரக்கம் இல்லா பாதகர்
துன்புறுத்தி வேலை வாங்க
பிள்ளை மனம் அழும்


பாடசாலை சீருடையைக்காண
நானும் இப்படி ........................சிந்தனை
தடைப்படும் விரைவாய்
இயங்கும் கால்கள்பட்ட காலில் பட்டு
குருதி தன் பாட்டில்
வழிய இவர்கள் தன் பாட்டில்
தம்மை மறந்து .........பயந்து ............இயங்குவர்


பாலர்கள் பட்டினி தவிர்ப்புக்காய்
பள்ளியை மறந்த போதும்
பட்டினி இவரை
மறப்பதில்லை, தவிர்ப்பதில்லை


ஏழ்மையின் பாரத்தை
பிஞ்சு தோள்கள் சுமக்க
எழ்மை தன் கோரப்பசிக்கு
இவர் கல்வியையும் திறனையும் உணவாக்கும்நாளைய முடிசூடா மன்னர்கள்
இன்றே முடிகள் உடைகப்பட்டு
பட்டாபிஷேக கனவு
இருண்ட வெளிக்குள் .....................

சனி, 22 ஆகஸ்ட், 2009

சிறை


இருட்டுக்குள்ளே விரும்பி நானே சென்று
இருட்டடிப்பு செய்யப்பட்டேன்
விரும்பாமலே சிறையிடப்பட்டேன்
யன்னல் கம்பிகள் பற்றும் விரல்கள்
சிறைக்கம்பிகள்கு வித்தியாசம்
இல்லை என்று ஒப்புகிறது
கம்பிகளின் பின் சிறையிடப்பட்டு .................
ஆயுள் கைதியாய் ........................
எழுத்தில் வடித்த பெண்ணியம்
இன்றும் வாழ்வோடு ஒத்து
வர மறுத்து திருமணம் இன்றியே
விவாகரத்து செய்கிறது
முடங்கலும் முடக்கப்படலும்
முயலாமை இன்றி அரங்கேறும்
ஆனால் நான் முயன்றால் ...................
என் போலி வேஷம் கலையும்.
இரக்கப்படல் எனும் குண்டூசி
ஆறுதல் வார்த்தையாகி
என் மனம் எங்கும் குத்திக்குத்தி
கோலமிடும் ,குருதிக் கோலமிடும்
வேடம் தரித்து போலியாய்
மடிதலை காட்டிலும்
முகமூடியை கிழித்தெறிந்து
இயல்பாக முயல்கிறேன்
தடைகல்லாய் என் முன்
போலி வரட்டுக்கௌரவம்
எப்படியும் தலை குனிவின்றி
தலை நிமிர முயல்கின்றேன்.......................
தடைக்கற்களால் நானே
என்னை வரிந்து கொண்டதால்
அதன் நடுவே சமாதியாய் ஆகிவிட
எண்ணுகிறேன்............ இல்லை
சாளர ,சிறை கம்பிகள் முறித்து
எறியப்படும் ............................ இவள் கரங்களால்


வியாழன், 20 ஆகஸ்ட், 2009

விபத்து


சிந்தனையில் சிறைபட்டு
சீக்கிரமாய் செல்வதற்காய்
மஞ்சள் கோட்டை மறந்து சென்ற
மாது மடிந்துவிட்டாள் இங்கு

மறைத்து விட்டாள் என்றாலும்
மறையுமா வடு?
பாலூட்டி வளர்தவள் பரிதவித்திருப்பாள்
இனி அவள் துயர் மறையா வலி


தன் பிள்ளை என்று பெருமை
பேசி தோளிலே போட்டு வளர்த்த
பிதாஇக்கணம்........உலகே இருட்டியதாய்உணர்ந்து
மூலையிலே முடங்கி..............


காதலன் ஒருவன் இருந்திருந்தால்
உலகில் கண்ணை கட்டி விட்டது போல்
கனவு எது ? நனவேது ? தெரியாமல்
சித்தம் கலங்கும் புரியாமல்


போலிப்பொல்லாப் உறவுகளும்
பொறுப்புடன் இங்கு பேசும்
நல்ல பிள்ளை என்று
நற்சான்றிதழ் பத்திரம் வழங்கும்

பூமிக்கு இது ஒன்றும் புதிதில்லை
ஆடி அடங்கல் இயல்பு
புரிந்ததன் விளைவு விடிகிறது

உன் வருகைக்காய்


உன்னை கைகளில் ஏந்திய
அந்த நிமிடம் ........................
வாழ்வில் மீண்டும் மீண்டும்
வர வேண்டும் என வேண்டும் பொழுது


தளிர் கரங்கள் பற்றி உன் முகம்
பார்த்தபோது உன் கண்கள்
பேசிய மொழி,புரிந்தும்
புரியாத ஒரு புது புது மொழி.


உன் செயல்கள் ஒவ்வொன்றிலும்
என் தாயையும் தாதையையும்
கண்டு என்னுள் மகிழ்ந்த பொழுது
நீ என் பூஞ்சோலை வாழ்வின் ராஜா பூ ,ரோஜா


இன்று மகனே ...................முதியோர்
இல்லமத்தில் உன் வருகைக்காய்
ஏழை இவள் வழி மீது விழி தீட்டி..................


மூலையில் முடங்கல் கூட உன் வீட்டில்
அங்கீகரிக்கப்படாமையால்
பிரஜாஉரிமை இல்லாதவளாய்
கட்டாய வெளியேற்றம்
செய்யப்பட்டேன்...............


பேதை இவள் பிறந்த தினம் தெரியாத நீ
அன்னையர் தினம் அன்று
தவறாமல்அனைத்து
உபசாரமும் செய்கிறாய்


நல்ல வேளைஅன்னையர் தினம்
மட்டும் இல்லை என்றால் .
அன்னை இவளை மறந்திருப்பாய் ...........

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

உறவுபோலியும் பொல்லாப்பும் உறவாய்

போகும் வழி தெரியா காட்டில்

நரிகளும் நாய்களும் இங்கு குருதியை

நக்கி குடித்து ஏப்பம்விட

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

கனவு


கனவு
எண்ணியது எல்லாம் இங்கு நடப்பதில்லை
நடப்பதை பெரிதும் எண்ணுவதில்லை
கனவுகளும் கற்பனையும் என்றும்
எமை கடந்து நெருங்காமலே தம்வழியே...........

விரக்திவிரக்தி


இதயம் கனக்கிறது

இங்கிதம் இன்றிய பேச்சுகள்

இனிமை சுவடில்லா பார்வைகள்

இனியும் என்ன என் வாழ்வில்?

இன்றே மடிந்தே விடுவேனோ?

இல்லை மரணம் ஒரு முறைதான்

இவள் நேற்றே இறந்துவிட்டாள்...........


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

சதி


விதிக்கு என் மீது இவ்ளவு விருப்பமா?

வியக்கிறேன் நான்

சதி செய்துஎன் வழ்வை நரகமாய்

சக்கடைக்குள் புதைத்ததுவே

வியப்பு


வியப்பு

நரம்பிலா நாக்கின் சக்தியென்ன?
நரம்புகளே புடைத்திட செய்ததுவே
கண்கள் கண்ணீரை பொழிதல்
என் கடைகெட்ட கோழைத்தனம்

சந்தேகம்


என் மீது எனக்கே சந்தேகம்
நான் பைத்தியக்காரனோ?
பைத்தியங்கள் தாம் பைத்தியம் என்பதை
வைத்தியம் இன்றி ஒப்புவது இல்லையாம்


உயிரோடு சிதை


உயிர் உடலில் இருக்கிறது
உறுதி இல்லா இவர்கள்
சிதை மூட்டி என் உடலை
சீக்கிரமாய் வாட்டுகிறார்

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

கம்பன்


கம்பன்

செ
ற்ளை கோத்து
கவி மாலை யாத்து -கம்பா
தமிழ்
கவியுக்கு நீ வித்து
தமிழுக்கு நீ சொத்து

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

இராமன்


இராமன்

கம்பன் கவி நாயகன்
கருமை நிற மாயவன்
கற்பை ஆணுக்கும் உரைத்தவன்
கருணையில் கரை இலாக்கடல் அவன்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

எரியும் கனல்
உயிரின் ஓலம் .....மனதின் கொந்தளிப்பு
ஊசலாட்டதில் .......... நான்
உணர்வில்லா மரமாய் நான்
மரத்துப் போகிறேன்

பூவே


பூவே

மாலையில் உதிர்வாய் தெரிந்திருந்தும்
காலையில் எப்படி சிரிக்கின்றாய்?
சிரிப்பை மறந்த மனிதர்கு கொஞ்சம்
சிரிக்க சொல்லிக் கொடேன்

சனி, 8 ஆகஸ்ட், 2009

சாதனை


சாதனை
ஏற்றுவார் ஏற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
வேதனை ஏதும் இல்லை - ஏனெனில்
சாதனை எங்கள் கையில்

அம்மா


அம்மா

மூன்று எழுத்து தாரகை
முனிவு இல்லா தேவதை
கண்ணாலே கண்ட தெய்வம்
கரை இல்லா சொர்க்கம்


தலை கோதும் இதம்
தலாட்டும் ரிதம்
உணவூட்டும் பதம்
நீ எனக்கு மதம்
வேதனை


தேய்பிறை போல் நான் தேய்கிறேன்
தேய்வதால்
நான் அழுகின்றேன்
வெண் அணுக்கள் செய் யுத்தம்
வெறுமை
.........இல்லை சத்தம்


என்றோ
ஒரு நாள் இறந்திடுவேன்
என
க்கும் வாழ்வு புரிகிறது ஆனால்
இன்றே
மரணம் என்பதால்
செத்துச் செத்துப் பிழைக்கிறேன்


"
திரை கடல் ஓடி திரவியம் தேடு "
அலை கடல் நடுவே பயணமபோய்
திரவியம் தேட சென்றான் கணவன்
தேடி தந்தது திரவியம் மடடுமல்ல ...................

வ்வொரு விடியலும் சேவல் கூவலும்
ஒன்றை ட்டும் சொல்கிறது
நகரும்
நாட்கள் நரைக்கும் இரவுகள்
என்
மரணத்தை தேடிச் செல்கிறது


சாதல்
............இது தேடல் இன்றி
காதல
கொண்டு என் முன்
வா.........என்னருகே வா ..............
துணிந்து நான் சாதலை காதலித்து ...........


மரணம்
.....................என் வாழ்வின் முடிவு
ர்த்தின் திறவு கோல்................
மார்
ங்களின் சொர்கம் முடிய போகும் அத்தியாம் .......
முடிச்சவுளும்
தருணம்

வியாழன், 6 ஆகஸ்ட், 2009எனது முதலாவது பதிவு....................... வணக்கம் நல்ல ஒரு களம்;...................கருத்துகள்.............பரிமாற............உலக நடப்புக்கள்.பேச.....................