வெள்ளி, 18 செப்டம்பர், 2009

நெடுவழிப்பயணி


நீண்டவழி பயணத்தில்
நெடுவழி பயணி .........
தாண்டி வந்த பாதையில்
தடைகற்கள் தடக்கிவிட்டு
வீழ்ந்து எழுந்தவள்தான்
வீறுநடைக்காரி இவள்.......................................


நெஞ்சளுத்தகாரி தான்
நெஞ்சில் உரம் உள்ளவள்
பஞ்சப் பாட்டு படாமல்
பரவசமாய் வாழ்ந்தவள்.


கண்பார்வை மங்கிணும் அவள்
நேசப் பார்வை மங்காது
நாசி நுகர மறுக்கும் ஆனால்
பாசி படராது மனத்தில்..............................

4 கருத்துகள்: