செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

பிஞ்சு கரங்கள்


பஞ்சு நிகர் மென் கரங்கள் பாரமான
பொருளை தூக்கித்தூக்கி
சிவந்து .........கொப்பளித்து ...........................
புண்ணாகி .................உரமாக முயன்று ...........


இவர் வியர்வை சிந்துவர்
இரக்கம் இல்லா பாதகர்
துன்புறுத்தி வேலை வாங்க
பிள்ளை மனம் அழும்


பாடசாலை சீருடையைக்காண
நானும் இப்படி ........................சிந்தனை
தடைப்படும் விரைவாய்
இயங்கும் கால்கள்பட்ட காலில் பட்டு
குருதி தன் பாட்டில்
வழிய இவர்கள் தன் பாட்டில்
தம்மை மறந்து .........பயந்து ............இயங்குவர்


பாலர்கள் பட்டினி தவிர்ப்புக்காய்
பள்ளியை மறந்த போதும்
பட்டினி இவரை
மறப்பதில்லை, தவிர்ப்பதில்லை


ஏழ்மையின் பாரத்தை
பிஞ்சு தோள்கள் சுமக்க
எழ்மை தன் கோரப்பசிக்கு
இவர் கல்வியையும் திறனையும் உணவாக்கும்நாளைய முடிசூடா மன்னர்கள்
இன்றே முடிகள் உடைகப்பட்டு
பட்டாபிஷேக கனவு
இருண்ட வெளிக்குள் .....................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக