வியாழன், 20 ஆகஸ்ட், 2009

விபத்து


சிந்தனையில் சிறைபட்டு
சீக்கிரமாய் செல்வதற்காய்
மஞ்சள் கோட்டை மறந்து சென்ற
மாது மடிந்துவிட்டாள் இங்கு

மறைத்து விட்டாள் என்றாலும்
மறையுமா வடு?
பாலூட்டி வளர்தவள் பரிதவித்திருப்பாள்
இனி அவள் துயர் மறையா வலி


தன் பிள்ளை என்று பெருமை
பேசி தோளிலே போட்டு வளர்த்த
பிதாஇக்கணம்........உலகே இருட்டியதாய்உணர்ந்து
மூலையிலே முடங்கி..............


காதலன் ஒருவன் இருந்திருந்தால்
உலகில் கண்ணை கட்டி விட்டது போல்
கனவு எது ? நனவேது ? தெரியாமல்
சித்தம் கலங்கும் புரியாமல்


போலிப்பொல்லாப் உறவுகளும்
பொறுப்புடன் இங்கு பேசும்
நல்ல பிள்ளை என்று
நற்சான்றிதழ் பத்திரம் வழங்கும்

பூமிக்கு இது ஒன்றும் புதிதில்லை
ஆடி அடங்கல் இயல்பு
புரிந்ததன் விளைவு விடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக