வியாழன், 20 ஆகஸ்ட், 2009

உன் வருகைக்காய்


உன்னை கைகளில் ஏந்திய
அந்த நிமிடம் ........................
வாழ்வில் மீண்டும் மீண்டும்
வர வேண்டும் என வேண்டும் பொழுது


தளிர் கரங்கள் பற்றி உன் முகம்
பார்த்தபோது உன் கண்கள்
பேசிய மொழி,புரிந்தும்
புரியாத ஒரு புது புது மொழி.


உன் செயல்கள் ஒவ்வொன்றிலும்
என் தாயையும் தாதையையும்
கண்டு என்னுள் மகிழ்ந்த பொழுது
நீ என் பூஞ்சோலை வாழ்வின் ராஜா பூ ,ரோஜா


இன்று மகனே ...................முதியோர்
இல்லமத்தில் உன் வருகைக்காய்
ஏழை இவள் வழி மீது விழி தீட்டி..................


மூலையில் முடங்கல் கூட உன் வீட்டில்
அங்கீகரிக்கப்படாமையால்
பிரஜாஉரிமை இல்லாதவளாய்
கட்டாய வெளியேற்றம்
செய்யப்பட்டேன்...............


பேதை இவள் பிறந்த தினம் தெரியாத நீ
அன்னையர் தினம் அன்று
தவறாமல்அனைத்து
உபசாரமும் செய்கிறாய்


நல்ல வேளைஅன்னையர் தினம்
மட்டும் இல்லை என்றால் .
அன்னை இவளை மறந்திருப்பாய் ...........

1 கருத்து:

 1. Wonderful..."மூலையில் முடங்கல் கூட உன் வீட்டில்
  அங்கீகரிக்கப்படாமையால்
  பிரஜாஉரிமை இல்லாதவளாய்
  கட்டாய வெளியேற்றம்
  செய்யப்பட்டேன்..............
  பேதை இவள் பிறந்த தினம் தெரியாத நீ
  அன்னையர் தினம் அன்று
  தவறாமல்அனைத்து
  உபசாரமும் செய்கிறாய்
  அன்னையர் தினம்
  மட்டும் இல்லை என்றால்...!!!" Congrat's continue to write, and i love to see your novels here...write when u get time..

  பதிலளிநீக்கு