
இருட்டுக்குள்ளே விரும்பி நானே சென்று
இருட்டடிப்பு செய்யப்பட்டேன்
விரும்பாமலே சிறையிடப்பட்டேன்
யன்னல் கம்பிகள் பற்றும் விரல்கள்
சிறைக்கம்பிகள்கு வித்தியாசம்
இல்லை என்று ஒப்புகிறது
கம்பிகளின் பின் சிறையிடப்பட்டு .................
ஆயுள் கைதியாய் ........................
எழுத்தில் வடித்த பெண்ணியம்
இன்றும் வாழ்வோடு ஒத்து
வர மறுத்து திருமணம் இன்றியே
விவாகரத்து செய்கிறது
முடங்கலும் முடக்கப்படலும்
முயலாமை இன்றி அரங்கேறும்
ஆனால் நான் முயன்றால் ...................
என் போலி வேஷம் கலையும்.
இரக்கப்படல் எனும் குண்டூசி
ஆறுதல் வார்த்தையாகி
என் மனம் எங்கும் குத்திக்குத்தி
கோலமிடும் ,குருதிக் கோலமிடும்
வேடம் தரித்து போலியாய்
மடிதலை காட்டிலும்
முகமூடியை கிழித்தெறிந்து
இயல்பாக முயல்கிறேன்
தடைகல்லாய் என் முன்
போலி வரட்டுக்கௌரவம்
எப்படியும் தலை குனிவின்றி
தலை நிமிர முயல்கின்றேன்.......................
தடைக்கற்களால் நானே
என்னை வரிந்து கொண்டதால்
அதன் நடுவே சமாதியாய் ஆகிவிட
எண்ணுகிறேன்............ இல்லை
சாளர ,சிறை கம்பிகள் முறித்து
எறியப்படும் ............................ இவள் கரங்களால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக