செவ்வாய், 3 நவம்பர், 2009

யதார்த்தம்


நரைத்த நாட்களின் மத்தியில்
நகரல் மட்டும் நிரந்தரமாய்
உடைந்த மண் சட்டிகளும்
பானைகளும் முன்னைய உருவம்
பெற முயன்று தவமியற்றி ................
மண்ணோடு மண்ணாகல்
கனவை நனவுகளில் சுமந்து ..........ஏக்கங்களில்
நனைந்து.................
முழ்கி .........திணறி ............
மீண்டும் மீண்டும் சடலமாய் நீரில் மிதந்து ........


சூளையில் சுட்ட சட்டி
வலி தாங்கிக் கொண்டது
உரமாதலால் ..........ஆனால்.......
உரமான பின்னும்
தீ மேல் வழ்க்கை
உடல் தீ மேல் தகித்தல்உளமும் கூட,
கொதி நீரில் அவிந்து
சிவந்த உரு தீ மூட்டலால்
சிதைந்து கருமை உரு கொண்டு
நரைத்த நாட்களின் மத்தியில்
நகரல் மட்டும் நிரந்தரமாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக