வியாழன், 5 நவம்பர், 2009

பெரியவனாக சின்னவன் .............


அண்டவெளியை ஏக்கமுடன்
அண்ணார்ந்து பார்த்து
நாளை பற்றிய கனவில்
அவனை அவனே மறந்து .....................

சின்னவனின் ஞாபகங்கள்
சிட்டுக்குருவி போல
சிறகடித்து மனமெங்கும்
சின்ன ஒரு வலி பிறக்கும்


பிஞ்சு கரம் பற்றி
பிள்ளை நடை பழக்கி
உள்ளம் உவகையுற
உளமும் ஏக்கமுறும்


நெற்றியை வருடி
நெஞ்சை நீவி
முக்குப் பிடித்து
இதழ்கள் பதித்து
மழலை கேட்டு
இதயம் கொடுத்து
இதயம் வாங்கி
சிரிப்பில் மயங்கி
உதைகள் வாங்கி
அழுகையில் துடித்து .......................
பிரிதல் இங்கு
கொடுமை ................
நாளை மகனை காண
மண்ணில் மிதிக்கையில்
பெரியவனாக இவன்
சின்னவன்.இழத்தல்,
ஆசைகள் எல்லாம்
மனதுள் கிளர்ந்தெழ
பயணம் ...................பயண முடிவில்
மழலை தொலையும்
பெரியவனாக சின்னவன் ......................

1 கருத்து:

 1. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  பதிலளிநீக்கு